CINEMA
ராஷி கண்ணாவுடன் ஓட்டம் பிடித்த தனுஷ்.. என்னவா இருக்கும்..?
தனுஷ் ராஷி கண்ணாவின் கையை பிடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் தனுஷுடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த சிறந்த Feel Good திரைப்படம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். தனுஷ் நடிப்பை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. இந்த திரைப்படத்திலும் சிறந்த நடிப்பையே தந்திருக்கிறார். ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் ஒரு பக்கத்து வீட்டு பையன் போல் தென்படுகிறார் தனுஷ். அதே போல் தனுஷிற்கு தோழியாக வரும் நித்யா மேனன் தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டு போகிறார்.
சிடுசிடுவென இருக்கும் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனுஷின் தாத்தாவாக வரும் பாரதி ராஜாவின் கதாப்பாத்திரம் ஒரு உயிர் நண்பனின் கதாப்பாத்திரம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் தனது நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதாநாயகிகளான பிரியா பவானி ஷங்கரும், ராஷி கண்ணாவும் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மரண ஹிட் ஆகியிருந்த நிலையில் அப்பாடல்கள் திரையில் தோன்றும்போது மிகவும் Fresh ஆக இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார் அனிருத். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு திரைப்படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்கிறது. பிரசன்னாவின் எடிட்டிங் பக்கா.
இந்த நிலையில் நேற்று சென்னை ரோஹினி திரையரங்கில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தை தனுஷ் ராஷி கண்ணாவுடன் பார்த்தார். காட்சி முடிந்ததும் திரையரங்கில் ரசிகர்கள் தனுஷை பார்க்க கூடினார்கள். ஆதலால் ராஷி கண்ணாவை பிடித்துக்கொண்டு வேகமாக திரையரங்கிற்கு வெளியே ஓடினார். இச்சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.