CINEMA
பைக்கில் பறந்து வரும் தனுஷ்.. வெறித்தனமான வீடியோ
தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கை வசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த “மாறன்”, “கலாட்டா கல்யாணம்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு “திருச்சிற்றம்பலம்”, “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படமும் வெளியாக தயாராக உள்ளன.
இதனிடையே சில மாதங்களுக்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை சத்யஜோதி ஃப்ளிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றனர் என்ற தகவலும் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்தான முக்கிய அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் தனுஷ் பைக்கில் தனது கூட்டாளிகளுடன் பறந்து வருகிறார். இதில் இருந்து தனுஷ் இத்திரைப்படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இது Period Film எனவும் தெரிய வருகிறது. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் கதை நகர்கிறது என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவில் ஒரு கப்பல் காட்டப்படுகிறது. அந்த கப்பலில் பிரிட்டிஷ் கொடி போல் ஒன்று இருக்கிறது.
அந்த கப்பலை நோக்கி கொள்ளை கார கும்பல் போல் முகத்தை மூடிக்கொண்டு தனுஷும் தனுஷின் கூட்டாளிகளும் பைக்கில் வருகிறார்கள்.
இதனை கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் ஒரு படையை தனுஷ் திரட்டுகிறாரோ எனவும் வியூகிக்க முடிகிறது.
“கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே ஆகிய மாதங்களில் வெளியாக உள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
