CINEMA
கையில் வில்லுடன் தனுஷ்… “நானே வருவேன்” நியூ லுக்
கையில் வில்லுடன் தனுஷ் தென்படும் “நானே வருவேன்” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
தனுஷ் தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். தனுஷ் நடித்த “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இதில் தனுஷ் சில காட்சிகளே வந்திருந்தாலும் சண்டை காட்சியில் மிரட்டி எடுத்துவிட்டார்.
மேலும் தனுஷ் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளிவருகிறது. அதனை தொடர்ந்து “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது Period Film எனவும் தெரிய வருகிறது. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் கதை நகர்கிறது என சில செய்திகள் தெரிவிக்கின்றது.
இதனிடையே நேற்று தனுஷ் நடித்த “வாத்தி” திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. “வாத்தி” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். ஜி வி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “வாத்தி” திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செல்வராகவன் தனுஷை வைத்து “நானே வருவேன்” என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இன்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு “நானே வருவேன்” திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் தனுஷ் கையில் வில்லுடன் ஒரு காட்டுக்குள் தென்படுகிறார். தனுஷின் ஹேர் ஸ்டைலே வித்தியாசமாக உள்ளது. இந்த போஸ்டரை இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டுள்ளார்.
நாளை பிறந்தநாள் காணும் திரு @dhanushkraja மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க #NaaneVaruven திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth #HBDDhanush pic.twitter.com/DImpOtZE18
— Kalaippuli S Thanu (@theVcreations) July 27, 2022
