CINEMA
“மின்னல் போல் ‘சொயிங்’ என்று சென்ற தனுஷ்”… கண் சிமிட்டும் நேரத்தில் ஆள காணுமே??
தனுஷ் நடிப்பில் உருவான ஆங்கில திரைப்படமான “தி கிரே மேன்” திரைப்படத்தின் டிரைலரில் “தனுஷை காணோமே” என ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த “தி கிரே மேன்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் மார்வல் திரைபடங்களில் “கேப்டன் அமெரிக்கா” ஆக நடித்த கிரிஸ் ஈவன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இதனிடையே “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷும் நடித்துள்ளார் என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து “தி கிரே மேன்” எப்போது வெளிவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. திரைப்படம் பக்கா ஆக்சன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
எனினும் டிரைலரில் தனுஷ் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தென்படுகிறார். ஆதலால் திரைப்படத்தில் அவரது காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்காதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
“தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற திரைப்படம் மூலம் தனுஷ் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்திய திரையுலகமே அவரை “ஆ” என பார்த்தது. அதன் பின் ஹிந்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சமீபத்தில் அவர் நடிப்பில் “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்தது.
அதன் பின் சில மாதங்கள் கழித்து “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது டிரைலர் வெளிவந்துள்ளது. எனினும் தனுஷ் இடம்பெரும் காட்சிகள் எந்தளவிற்கு இருக்கும் என திரைப்படம் வெளிவரும் போது தான் நமக்கு தெரிய வரும். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 22 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது.