CINEMA
தனுஷோட “கேப்டன் மில்லர்” என்ன கான்செப்ட் தெரியுமா?
அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தை இயக்கவிருப்பதாக சமீபத்தில் வெளியான தகவலை அடுத்து இப்படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்படத்துறையை சேர்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கொண்ட மாநாடு ஒன்று நடந்தது. அதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்தும் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டதாக தெரியவந்தது.
இந்த மாநாடுக்கு சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தலைமை தாங்கியதாக தகவல்கள் தெரிவித்தன. அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் தங்களுடைய வருங்கால பிராஜெக்டுகள் குறித்து ஒரு கையேடு வெளியிடப்பட்டதாம். அதில் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்போகும் படங்களில் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக குறிப்பிட்டிருந்ததாம்.
மேலும் அப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், முன்னதாக “ராக்கி” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இத்திரைப்பத்திலும் பணியாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. “ராக்கி” திரைப்படம் போல் இத்திரைப்படத்திலும் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் “கேப்டன் மில்லர்” திரைப்படம் 1930 களில் நடப்பது போன்ற கதையம்சம் உடையதாக அமையப்போகிறது என தெரிவந்துள்ளது. அதே போல் இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பேன் இந்திய திரைப்படமாக வெளிவரப்போகிறது என கூறப்படுகிறது.
அருண் மாதேஸ்வரனின் “சாணி காயிதம்” திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இத்தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக பிரேமம் புகழ் அல்ஃபோன்ஸ் புத்திரன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர்களின் திரைப்படங்களையும் தயாரிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.