CINEMA
தனுஷும் அனிருத்தும் இணையும் புதிய திரைப்படம் எப்போ ன்னு தெரியுமா?
தனுஷ் நடிப்பில் உருவான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?
நடிகர் தனுஷ் தற்போது கை வசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “மாறன்” திரைப்படத்திற்கு ஓரளவு பாஸிட்டிவ் கம்மெண்ட்டுகள் வந்தன. அதன் பின் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான “தி கிரே மேன்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலரும் வெளியானது.
இதனிடையே சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் “திருச்சிற்றம்பலம்” என்ற திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
மித்ரன் ஆர் ஜவஹர் இதற்கு முன் தனுஷ் நடித்த “யாரடி நீ மோகினி”, “குட்டி”, “உத்தம புத்திரன்” ஆகிய திரைப்படங்களையும் இயக்கியவர். மேலும் “மீண்டும் ஒரு காதல் கதை”, “மதில்” ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் குறித்தான முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது அதாவது இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 18 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
“திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல காலம் கழித்து தனுஷ் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன் ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி இத்திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது “திருச்சிற்றம்பலம்” ஆகஸ்து 18 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Well it’s been a while isn’t ? Thiruchitrambalam from august 18th. See you all in theatres. pic.twitter.com/foFZmqronV
— Dhanush (@dhanushkraja) June 15, 2022