Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஒரே ஹோட்டலில் தங்கியுள்ள தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா?.. வெளியான பரபரப்பு தகவல்..!

Dhanush and Aishwarya

CINEMA

ஒரே ஹோட்டலில் தங்கியுள்ள தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா?.. வெளியான பரபரப்பு தகவல்..!

கடந்த ஒருவாரமாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படும் விஷயம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டு கால திருமண வாழ்கையை முறித்து கொள்வதாக ஒன்றாக சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும் முன்னணி நடிகருமான தனுஷ்க்கும் திருமணம் நடைபெற்று தற்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆகி 18 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தாங்கள் மனப்பூர்வமாக பிரிய போவதாக இருவருமே சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டனர். இது அவர்களது ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Dhanush

Dhanush

சமீபத்தில் தான் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிந்தார்கள், அதற்குள்ளாகவே அடுத்த பிரபல நட்சத்திர ஜோடி விவாகரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளதாகவும் அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே போல், நடிகர் தனுஷும் வாத்தி பட ஷூட்டிங்க்காக ஹைதராபாத்தில் இருப்பதாகவும் அவரும் ஐஸ்வர்யாவும் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் கோலிவூட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், “தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு இடையே வெறும் குடும்ப பிரச்சனை மட்டுமே உள்ளது.

சென்னை திரும்பியதும் அவர்களுடன் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்வேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இருவரும் ஒரே ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top