CINEMA
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரஜினி பட நடிகை.. அதிர்ச்சியில் படக்குழுவினர்
படப்பிடிப்பு தளத்தில் ரஜினி பட நடிகை மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் தீபிகா படுகோன். “ஓம் ஷாந்தி ஓம்” திரைப்படத்தின் மூலம் திரை உலகில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மோஷன் கேப்சர் திரைப்படமான “கோச்சடையான்” திரைப்படத்திலும் நடித்தார். இவர் நடித்த “ராம் லீலா”, “பாஜிராவ் மஸ்தானி”, “பத்மாவத்” ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் ஹிட் அடித்த திரைப்படங்கள் ஆகும். தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
தீபிகா படுகோன் பாலிவுட் மட்டும் அல்லாது “XXX” என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிரபாஸுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்திற்கு “Project K” என பெயரிடப்பட்டுள்ளது.
அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அப்படப்பிடிப்பின் போது திடீரென தீபிகா படுகோன் மயங்கி விழுந்துள்ளார். அதாவது அவர் இதயம் திடீரென வேகமாக துடித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தீபினா படுகோனை ஹைதராபாத்தில் உள்ள கமினேனி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சைக்கு பின் தீபிகா படுகோனின் உடல் நிலை தேறியுள்ளது. அதன் பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் வந்து நடித்துள்ளார்.
“Project K” திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனுடன் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ஆதலால் இத்திரைப்படத்திற்கு எக்ஸ்பெக்டேஷன் எகிறியுள்ள நிலையில் படப்பிடிப்பில் தீபிகா படுகோனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.