TELEVISION
“யப்பாங்கோ” என்று நடுக்கடலில் தவறி விழுந்த டிடி அக்கா.. வைரல் வீடியோ
கடலில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்த டிடி அக்கா பிரியதர்ஷினியை அலை தள்ளிக் கொண்டு போன நகைச்சுவை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்து வந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் தனது சிறு வயதிலேயே “சுபயாத்ரா” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து “ஜூலி கணபதி”, “நள தமயந்தி”, “விசில்”, “சரோஜா”, “பவர் பாண்டி” “சர்வம் தாள மயம்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தொகுப்பாளராக தோன்றிய “காஃபி வித் டிடி”, “ஜோடி நம்பர் ஒன்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.மேலும் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் ஒலித்துள்ளார்.
இவரது சகோதரி பிரியதர்ஷினியும் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். மேலும் பிரியதர்ஷினி பரதநாட்டியத்தில் வல்லவரும் கூட. பரதநாட்டியம் மட்டுமல்லாது கதகளி, குச்சிபிடி என பல கலைகளிலும் வல்லவர். இவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இவர் நடனாடி பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிரியதர்ஷினி கடல் பாறையில் நின்றபடி நடனமாடிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் அவர் நடனமாடும்போது கடல் அலை அவரை தள்ளிக்கொண்டு போனது. ஒரு வழியாக தத்தி தடுமாறி எழுந்து கொண்டார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனத்தை பின்னணியில் ஒலிக்கவிட்டு நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram