GALLERY
ஜொலி ஜொலிக்கும் உடையில் கவர்ந்திழுக்கும் டிடி…வைரல் புகைப்படங்கள்
ஜொலி ஜொலிக்கும் உடையில் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்து வந்தவர் டிடி என்ற திவ்ய தர்ஷினி. இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் தனது சிறு வயதிலேயே “சுபயாத்ரா” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து “ஜூலி கணபதி”, “நள தமயந்தி”, “விசில்”, “சரோஜா”, “பவர் பாண்டி” “சர்வம் தாள மயம்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தொகுப்பாளராக தோன்றிய “காஃபி வித் டிடி”, “ஜோடி நம்பர் ஒன்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.மேலும் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் ஒலித்துள்ளார்.
திவ்ய தர்ஷினிக்கு என்றே இங்கே தனி Fan base உண்டு. 90’s kid-களின் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளினிகளில் இவரும் ஒருவர். இவர் தொகுப்பாளராக பங்கேற்ற ஷோக்கள் பலவும் வேற லெவலில் ரீச் ஆன ஷோக்கள்.
குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் இவரது ஷோக்கள் வரும்போது இவரை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் டிவி முன் தேவுடு காத்துக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு மக்களின் மனங்களில் சென்று உட்கார்ந்து கொண்டவர்.
தற்போது அவ்வப்போது தான் சில நிகழ்ச்சிகளில் காட்சித் தருகிறார் என்றாலும் இவரது சமூக வலைத்தளப் பக்கம் படு பிசியாக இருக்கும். கண்ணை கவரும் விதமாக பல புகைப்படங்களை டிடி இறக்கி இளைஞர்களை திணறடிப்பார்.
சமீபத்தில் கூட தனது முடியை அழகாக செதுக்கி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஜொலி ஜொலிக்கும் உடையில் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.