TELEVISION
முத்துக்குமார் கோழியவே ஓட விட்டு தான் வெட்டுவார்.. பங்கமாய் கலாய்த்த CWC பாலா…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் CWC பாலா, குக்குகள் அனைவரையும் பங்கமாய் கலாய்த்தது அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற வாரம் Ticket to finale வாரமாக அமைந்தது. இதில் டாப் 5 குக்குகளாக முன்னேறிய வித்யூலேகா, ஸ்ருத்திகா, தர்ஷன், அம்மு அபிராமி, முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கோமாளிகள் இந்த முறை பிரபல கேங்கஸ்டர் கதாப்பாத்திரங்களாக வேடமிட்டு வந்தனர். குறிப்பாக பாலா “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த சந்தனம் கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார்.
சந்தனம் கதாப்பாத்திரம் போலவே உடை அணிந்து ஒற்றை கண் கிளாஸுடன் வந்திருந்தார். ஸ்ருத்திக்காவிற்கு Pair ஆக வந்த பாலா, குக்குகள் அனைவரையும் பங்கமாய் கலாய்த்தார்.
அம்மு அபிராமி சமைக்கும் போது இறாலே அவரிடம் சமையலுக்கு தேவையான ஐட்டங்களை கூறும் என கூறினார். மேலும் ஸ்ருத்திகாவிற்கு ஹாலிவுட் திரைப்படத்தில் டைனோசருக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது என கூறியது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
மேலும் மதுரை பேருந்து நிலையத்தில் “ஆண்ட்டி”பட்டி போகும் பேருந்தின் அறிவிப்பு பலகையை திருடி தர்ஷன் அடிவாங்கினார் என கூறினார்.
மேலும் முத்துகுமாருக்கு வில்லனிஸம் ஊறிப் போய் கோழியையே ஓட விட்டு தான் வெட்டுவார் என கூறியது அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
ஸ்ருத்திகா சிறப்பாக சமைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினார். மேலும் ஸ்ருத்திகா இறுதி போட்டிக்கான டிக்கெட்டையும் வென்றார். இதனால் அவர் அடுத்து நடைபெற இருக்கும் எலிமினேஷன் வாரத்திலும் Semi Final வாரத்திலும் சமைக்க அவசியமில்லை.