TELEVISION
“குக் வித் கோமாளி” புகழின் ஆல்பம் சாங் ரிலீஸ்…
“குக் வித் கோமாளி”புகழ் பங்குபெற்ற டீஜேவின் ஆல்பம் பாடல் இன்று வெளியாகிறது.
டீஜேவின் “முட்டு முட்டு என்ன முட்டு” என்ற பாடலை நாம் என்றும் மறந்திருக்கமாட்டோம். தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் தெறிக்கவிட்ட பாடல் அது. இன்றும் அந்த பாடலை கேட்போர் பல உண்டு.
அப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் காதலர்களை வசீகரிக்கும்படியாக அமைந்திருக்கும். டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்தில் வந்த அப்பாடல் பல்வேறு ரசிகர்களை யார் இந்த டீஜே என திரும்பி பார்க்க வைத்தது.
“முட்டு முட்டு” பாடல் மட்டுமல்லாது பல தனி ஆல்பம் பாடல்களை இவர் பாடியுள்ளார். “பிலிவ் மை லவ்” “ராட்சசி” “50 கேஜி தங்கமா” இதில் குறிப்பிடத்தக்கது.
தனிப்பாடல்கள் மட்டுமல்லாது “ஜில் ஜங் ஜக்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஷூட் தி குருவி”, “சிம்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “மறந்ததே” போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் “முட்டு முட்டு” பாடலுக்கு “பெஸ்ட் மியூசிக் அவார்ட் 2013” விருதையும் பெற்றார். அது மட்டுமல்லாது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுரத்தனமாக வெற்றியடைந்த “அசுரன்” திரைப்படத்தில் தனுஷ் ஏற்று நடித்த கதாப்பாத்திரமான சிவசாமியின் மூத்த மகன் வேல்முருகன் ஆக நடித்துள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு “முட்டு முட்டு” பாடலின் இரண்டாவது வெர்ஷனாக “Muttu Mu2” வீடியோ ஆல்பம் உருவாக உள்ளதாக தகவல் வந்தது. அதன் பின் அதற்கான புரோமோ வீடியோவும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து இன்று இரவு ஏழு மணிக்கு “டிவோ மியூசிக்” யூட்யூப் சேன்னலில் இப்பாடல் வெளிவரவுள்ளது.
இதில் “குக் வித் கோமாளி” புகழ், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடனமாடியுள்ளனர். இப்பாடலை டீஜேயுடன் இணைந்து யோகி பி, குக் வித் கோமாளி ஷிவாங்கி இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.