TELEVISION
குக் வித் கோமாளியில் க்யூட்டாக வந்த பிரியங்கா மோகன்..
குக் வித் கோமாளியில் இந்த வார நிகழ்ச்சியில் கலகலப்பாகவும் க்யூட்டாகவும் பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
குக் வித் கோமாளியில் இந்த வாரம் சிவகார்த்திகேயனுடன் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் வந்த புரோமோ வீடியோ மூலம் இது தெரிய வந்துள்ளது.
பிரியங்கா மோகன் கோமாளிகளுடன் சேர்ந்து செம ஜாலியாக குறும்பு செய்கிறார். ஜட்ஜ்களின் அருகில் உட்கார்ந்து குக்குகள் சமைத்த உணவுகளை டேஸ்ட் பார்த்து கம்மெண்ட் சொல்கிறார்.
“சாப்பாடு சரியா வேகலையே” என மணிமேகலையை கலாய்க்கிறார். வழக்கம்போல் இந்த வாரமும் ஜாலியான ஒரு எபிசோட் காத்திருக்கிறது. எனினும் இந்த வாரம் எலிமினேட் வாரம் என்பதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலையும் இருக்கிறது. எனினும் பிரியங்கா மோகனின் வருகை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, பால சரவணன், முனிஸ் காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ். ஜே. சூர்யா வில்லனாக வருகிறார். இன்று இத்திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். “டான்” திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரிவ்யூக்களே பெரும்பான்மையாக வருகின்றன.
சிவகார்த்திகேயன் மாஸாக நடனம் ஆடுகிறார் எனவும், கல்லூரி மாணவராக துரு துருவென நடித்திருக்கிறார் எனவும் கமென்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் எஸ். ஜே. சூர்யா வில்லனாக கலக்கி இருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் படத்தின் கிளைமேக்ஸில் சென்டிமன்ட் காட்சிகள் மனதை உருக்குவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் “டான்” திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேலும் கலகலப்பாக்க உள்ளனர்.