TELEVISION
குக் வித் கோமாளியில் ஃபைனலுக்கு போன அந்த நான்கு பேர்…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஃபைனலுக்கு சென்ற அந்த நான்கு பேர் யார் யார் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற வாரம் செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் அம்மு அபிராமி, முத்துக்குமார், வித்யூலேகா, தர்ஷன் ஆகியோர் போட்டி போட்டனர்.
ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வென்று ஸ்ருத்திகா நேரடியாகவே இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் செமி ஃபைனலில் நால்வருக்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.
இதில் அம்மு அபிராமி சிறப்பாக சமைத்து செகண்ட் ஃபைனலிட்டாக இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார். அதன் பின் வித்யூலேகா, தர்ஷன், முத்துக்குமார் ஆகியோருக்கு இடையே எலிமினேஷன் ரவுண்ட் நடந்தது.
அதில் சிறப்பாக சமைத்து வித்யூலேகா மூன்றாவது ஃபைனலிஸ்டாக இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார். இதனை தொடர்ந்து முத்துக்குமார், தர்ஷன் ஆகியோருக்கிடையே யாரை எலிமினேட் செய்வது என்பதில் நடுவர்களுக்கு குழப்பம் வந்தது.
ஏனென்றால் இருவருமே சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்றனர். எனினும் நிகழ்ச்சியின் விதிகளின் படி ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலையில் தவிர்க்க முடியாத சின்ன பாயிண்ட் வேறுபாட்டால் முத்துக்குமார் எலிமினேட் ஆனார். ஆதலால் தர்ஷன் நான்காவது ஃபைனலிஸ்டாக இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார்.
கோமாளிகளின் ஃபேவரைட் குக் ஆன முத்துக்குமார் எலிமினேட் ஆனதை தொடர்ந்து பலரும் சோகத்தில் மூழ்கினர். எனினும் அடுத்த வாரம் வைல்ட் கார்டு ரவுண்டில் இதற்கு முன்பு எலிமினேட் ஆன பலரும் கலந்து கொள்ள உள்ளனர். அதில் முத்துக்குமாரும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் யார் ஐந்தாவது ஃபைனலிஸ்ட்டாக இறுதிச் சுற்றுக்கு நுழைவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
