TELEVISION
“குக் வித் கோமாளி” …இவங்க தான் டைட்டில் வின்னர்??
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் குறித்தான ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தற்போது முடிவை எட்டியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற ஃபைனல் போட்டியில் ஸ்ருத்திகா, வித்யூலேகா, கிரேஸ், சந்தோஷ், தர்ஷன், அம்மு அபிராமி ஆகியோர் போட்டியிட்டனர்.
கிரேஸ், சந்தோஷ் ஆகியோர் இதற்கு முன் எலிமினேட் ஆகி வைல்ட் கார்டு ரவுண்டில் மீண்டும் உள்ளே நுழைந்தனர். அந்த ரவுண்டில் சிறப்பாக போட்டியிட்டு கிரேஸ், சந்தோஷ், முத்துக்குமார் ஆகியோர் இறுதிச் சுற்று வரை சென்றனர். இதில் சந்தோஷ் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக தேர்வானார். எதிர்பாராவிதமாக ஆறாவது ஃபைனலிஸ்டாக கிரேஸ் தேர்வானார். முத்துக்குமார் சிறிதளவிலான பாயிண்ட் வேறுபாட்டால் எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் 6 பேர் ஃபைனலில் போட்டியிட்டனர். இந்த 6 குக்குகளில் கிரேஸ், வித்யூலேகா, ஸ்ருத்திகா ஆகியோர் Toughest குக்குகள். இவர்கள் மூன்று பேருக்குள்ளும் கடும் போட்டி இருக்கும்.
மூவருமே எந்த உணவு பொருள் வந்தாலும் அசால்ட்டாக சமைப்பவர்கள். சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்பாராவிதமாக கிரேஸும், வித்யூலேகாவும் எலிமினேஷனுக்கான ஃபேஸ் ஆஃப் ரவுண்டில் போட்டியிட்டனர். இதில் கிரேஸ் எலிமினேட் ஆனார்.
அதன் பின் வைல்ட் கார்டு ரவுண்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்த கிரேஸ் தான் சிறப்பான குக் என்று மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஃபைனலுக்குள் நுழைந்தார். இவ்வாறு ஃபைனலில் 6 பேர் போட்டியிட்டதில் யார் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்? என்பது குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருத்திகா என தெரிய வந்துள்ளது. எனினும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.