Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

குக் வித் கோமாளியில் அதிர்ச்சி.. சன் டிவியில் இருந்து இறங்கிய பிரபலம்

TELEVISION

குக் வித் கோமாளியில் அதிர்ச்சி.. சன் டிவியில் இருந்து இறங்கிய பிரபலம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சன் டிவியில் இருந்து ஒரு பிரபலம் இந்த வாரம் களமிறங்கி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்கி விட்டது. ஆம்!. சென்ற வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் செமி ஃபைனல் நடைபெற உள்ளது.

இந்த செமி ஃபைனல் வாரத்திற்கான புரோமோக்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒரு குக்குக்கு இரண்டு கோமாளிகள் pair ஆக உள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது பெரிய அதிர்ச்சி ஒன்றை நிகழ்ச்சி குழுவினர் நமக்கு தர உள்ளனர். அதாவது இந்த வாரம் செமி ஃபைனல் என்பதால் ஸ்பெஷலாக ஒரு நபரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

ஆம்! சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் நடுவர் கௌஷிக் இந்த வாரம் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அவர் உள்ளே நுழைந்தவுடன் பலரும் ஷாக் ஆகி அப்படியே நிற்கின்றனர்.

“நான் அவ்வளவு நல்லவன் கிடையாது” என்று அவர் பேசும் வசனம் டெர்ரராக உள்ளது. மேலும் குக்குகளுக்கு அதிர்ச்சியூட்டும் பல சிக்கலான டாஸ்க்குகளை கொடுப்பதாக தெரிகிறது.

முத்துக்குமார் அவருக்கு வந்த Dish-ஐ பார்த்து அரண்டு போகிறார். அதே போல் தர்ஷனும் அவருக்கு வந்த டிஸ் ஐ பார்த்து ஷாக் ஆகிறார். இதனால் இந்த வாரம் குக்குகளுக்கு சிக்கலான வாரம் போல் தெரிகிறது. எனினும்  யார் இந்த வாரம் எலிமினேட் ஆக போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

                   

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top