TELEVISION
சுற்றி சுற்றி சூனியம் வைத்த மணிமேகலை.. வசமாக சிக்கிய முத்துக்குமார்
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் புதிய புரோமோவில் மணிமேகலை தன்னுடைய சூனிய வேலையை தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் Friends and Family வாரம் என்பதால் குக்குகள் தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தனர்.
வழக்கம் போலவே வேற லெவல் Fun episode ஆக அது அமைந்தது. அதிலும் குரேஷி ஸ்ருதிகாவை போல் உடை அணிந்து வந்து ஸ்ருதிகாவின் கணவரிடம் கொஞ்சி கொஞ்சி பேசியது ஸ்ருத்திகாவை கடுப்பேத்தியது. மேலும் சென்ற வாரம் இம்யூனிட்டி வாரமும் கூட.
Lucky Comali என்ற செல்ல பெயர் கொண்ட பரத், ஸ்ருதிகாவிற்கு கோமாளியாக அமைந்திருந்தார். சொல்லி வைத்தார் போல் ஸ்ருத்திகா இம்யூனிட்டியை வென்று எலிமினேஷன் வாரத்தில் இருந்து தப்பித்தார். அனைவரும் பரத்தை லக்கி என கூறினர்.
இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம். இந்த வாரத்தின் புரோமோக்கள் தற்போது வெளிவந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் ஆர். ஜே. பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதில் சூனிய பொம்மை என பெயர் பெற்ற மணிமேகலை கையில் லங்கா கட்டையை உருட்டிக் கொண்டே ஒவ்வொரு டேபிளாக சென்று “இதில் ஒன்று விழுந்தால் எலிமினேஷன் ரவுண்டிற்கு செல்வார்கள்” என கூறி உருட்டுகிறார்.
அதில் ரோஷினியும், அம்மு அபிராமியும் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் முத்துக்குமார் மாட்டிக்கொண்டு விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே மணிமேகலை சென்ற எலிமினேஷன் வாரத்தில் கிரேஸ் கர்ணாஸையும் வித்யூலேகாவையும் குறிப்பிட்டு இந்த இருவரில் ஒருவர் எலிமினேஷன் ரவுண்டிற்கு செல்வார்கள் என நகைச்சுவையாக கூறினார்.
ஆனால் சொல்லி வைத்தது போல் இருவரும் எலிமினேஷன் ரவுண்டிற்கு வந்து கிரேஸ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது மணிமேகலையிடம் முத்துக்குமார் மாட்டிவிட்டார் என தெரிகிறது. மணிமேகலையின் சூனியத்தில் இருந்து முத்துக்குமார் தப்பிப்பாரா? இல்லையா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
