CINEMA
குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம்… என்னைக்கு ன்னு தெரியுமா?
குக் வித் கோமாளி புகழுக்கு அவரது காதலியுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் புகழ்பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்ந்து அவர்களின் வரிசையில் தற்போது நிற்பது புகழ். தன் ஆரம்ப காலத்தில் மிகவும் போராடி விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த இவர் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அதன் பின் புகழின் புகழ் உச்சத்தை தொட்டது.
இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதனை தொடர்ந்து புகழ் “சிக்சர்”, “சபாபதி”, “என்ன சொல்ல போகிறாய், “வலிமை”, “வீட்ல விஷேசம்”, “யானை”, “காசேதான் கடவுளடா”, “யானை” என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து போராடினால் வெற்றியை நிச்சயமாக அடையலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு புகழ் தான். அந்த அளவுக்கு மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.
இதனிடையே புகழ், பென்ஸ் ரியா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சமீபத்தில் கூறினார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் புகழ்-பென்ஸ் ரியா ஆகியோரின் திருமண தேதி குறிக்கப்பட்டுவிட்டது. ஆம்! அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் ரசிகர்கள் பலரும் புகழ்-பென்ஸ் ரியா ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.