TELEVISION
கையில் மாலையோடு வந்த மணிமேகலை.. அரண்டு போய் ஓடிய அம்மு…
மாலையோடு வந்த மணிமேகலையை பார்த்து அரண்டு போய் ஓடினார் அம்மு அபிராமி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்கி விட்டது. ஆம்!. சென்ற வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் செமி ஃபைனல் நடைபெற உள்ளது.
இந்த செமி ஃபைனல் வாரத்திற்கான புரோமோக்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒரு குக்குக்கு இரண்டு கோமாளிகள் pair ஆக உள்ளனர்.
அதில் மணிமேகலையும் பாலாவும், வடிவேலு காமெடியில் வரும் கதாப்பாத்திரமாக வந்துள்ளனர். அதாவது ஒரு திரைப்படத்தில் வடிவேலுவின் தங்கையை கவுண்டமணியும் செந்திலும் பெண் பார்க்க வந்திருப்பார்கள். அப்போது தன்னுடைய தங்கையான மணிமேகலையை வடிவேலு அழைப்பார்.
மணிமேகலையின் உருவத்தை பார்த்தவுடன் இருவரும் திகைத்து போவார்கள். “பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மணிமேகல, அதனால் வெக்கம் விட்டு போகல” என்ற வசனம் கூட அதில் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் பாலாவும் மணிமேகலையும் அந்த நகைச்சுவை காட்சியில் இடம்பெற்றிருந்த அண்ணன் தங்கை போல் வேடம் அணிந்து வந்திருந்தனர். அப்போது மணிமேகலையின் கையில் ஒரு மாலை இருந்தது. அந்த மாலையை யார் கழுத்தில் போடுகிறாரோ அவர் எலிமினேட் ஆகிவிடுவார் என பாலா கூற, மணிமேகலை தன் கையில் வைத்திருந்த மாலையை அம்மு அபிராமியின் கழுத்தில் போட போனார். அவரை பார்த்த அம்மு அபிராமி அரண்டு போய் ஓடினார். இவ்வாறு அந்த புரோமோ அமைந்திருந்தது.
ஸ்ருத்திகா இறுதி சுற்றுக்கான டிக்கெட்டை கைப்பற்றியதால் அவர் நேரடியாகவே இறுதி சுற்றில் கலந்து கொள்கிறார். இந்த சீசனில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
