TELEVISION
குக் வித் கோமாளியில் சிவகார்த்திகேயன்…
குக் வித் கோமாளியில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்குபெறுகிறார்.
தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் “குக் வித் கோமாளி” –ல் இந்த வாரம் சிவகார்த்திகேயன் பங்குபெறவுள்ளார். சமீபத்தில் வந்த புரோமோ மூலமாக இது தெரிய வந்துள்ளது.
வழக்கம் போல் குக்களிடமும் கோமாளிகளிடம் கலகலப்பாக பேசுகிறார். சென்ற வாரம் குரைஷி “மான் கராத்தே” சிவகார்த்திகேயன் கெட் அப்-ல் வந்திருந்தார். சிவகார்த்திகேயன் போலவே செம்மையாக மிமிக்ரி செய்தார்.
அதனை சிவகார்த்திகேயன் முன் செய்து காட்டுகிறார். சிவகார்த்திகேயன் “ என்ன விட நல்லா பேசுறியே” என குரைஷியை பாராட்டுகிறார். அதே போல் பிரியங்கா மோகனும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து கலகலப்பாக அனைவருடன் பேசிகிறார். இவ்வாறு அந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டான்” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், உதயநிதி ஸ்டாலின்,எஸ். ஜே. சூர்யா ஆகியோரும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, ஷிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். “டான்” டீசரில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் பள்ளி மாணவராகவும் இளமையாக காட்சித் தருகிறார். எஸ். ஜே. சூர்யா கல்லூரி முதல்வர் கதாப்பாத்திரத்தில் புதுமையான தோற்றத்தில் நடிக்கிறார். அதே போல் பள்ளி மாணவியாகவும் கல்லூரி மாணவியாகவும் பிரியங்கா மோகன் க்யூட்டாக காட்சி தருகிறார். இத்திரைப்படம் வருகிற மே 13 ஆம் வெளிவரவிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனும் பிரியங்கா மோகனும் குக் வித் கோமாளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
