Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஹிந்து கடவுளை அவமானப் படுத்திட்டீங்க”… ஆவணப் பட இயக்குனர் மீது குவியும் புகார்கள்

CINEMA

“ஹிந்து கடவுளை அவமானப் படுத்திட்டீங்க”… ஆவணப் பட இயக்குனர் மீது குவியும் புகார்கள்

ஹிந்து கடவுளான காளியை அவமானப் படுத்தி விட்டதாக ஹிந்து அமைப்புகள் ஆவணப் பட இயக்குனர் லீனா மணிமேகலையை எதிர்த்து போர் கொடி தூக்கி உள்ளனர்.

லீனா மணிமேகலை ஒரு பிரபல ஆவணப் பட இயக்குனர். இவர் ஒரு சமூக போராளியும் கூட. பெண் அடிமைத்தனம், ஜாதி வேற்றுமை, பாலின சமத்துவம் குறித்து தனது பல படங்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியவர்.

இந்நிலையில் லீனா மணிமேகலை தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது தான் இயக்கியுள்ள “காளி” என்ற திரைப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் காளி தெய்வம் புகை பிடிப்பது போல தென்படுகிறது. மேலும் காளி தெய்வத்திற்கு பின்னால் பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையில் LGBTQ வண்ண கொடியும் தென்படுகிறது.

இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சர்ச்சை பூதாகரமாக தற்போது வெடித்துள்ளது. “காளி” திரைப்படத்தின் போஸ்டர் டோரோண்டோவில் உள்ள அகா கான் மியூசியத்தில் நடைபெற்ற “Rhythms of Canada” என்ற விழாவில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பலரும்”ஹிந்துக்களை அவமானப்படுத்திய லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும்” என பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

மேலும் இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மதத்தை புண்படுத்துதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் பல வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள லீனா மணிமேகலை “எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்து விடப் போகிறேன்” என பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது “காளி” திரைப்படத்தை குறித்து சில வார்த்தைகளையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு மாலை பொழுதில் டொரோண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தை பார்த்தால் லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள் என்று கோஷம் இடுவதற்கு பதிலாக லவ் யூ லீனா மணிமேகலை என கூறுவீர்கள்.

Continue Reading

More in CINEMA

To Top