CINEMA
ஒரு வழியா “கோப்ரா” ரிலீஸ் ஆகப் போகுது.. எம்புட்டு நாளு..?
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் ஒரு வழியாக இந்த மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் “கே ஜி எஃப்” புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே எஸ் ரவிக்குமார் என பலரும் நடித்துள்ளனர்.
சீயான் விக்ரம் எந்த கதாப்பாத்திரத்திலும் திறமையாக நடிக்ககூடியவர். எந்த கெட் அப் போட்டாலும் அவருக்கு பொருந்தும். “கோப்ரா” திரைப்படத்தில் சீயான் விக்ரம் பல கெட் அப்களில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீயான் விக்ரம் இத்திரைப்படத்தில் ஒரு ஹை டெக் திருடனாக நடித்துள்ளார் என தெரியவருகிறது. அதுவும் எண்களை வைத்து விளையாடக்கூடிய திறமைப்படைத்த ஒரு திருடன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் அறியப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் “கோப்ரா” திரைப்படத்தை “ரெட் ஜெயன்ட் மூவீஸ்” சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் என அறிவிப்பு வந்தது. மேலும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி “கோப்ரா” திரைப்படம் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்தது.
அமீர் கான் நடித்த “லால் சிங் சத்தா” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் வாங்கினார். அத்திரைப்படமும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை அதனால் தான் “கோப்ரா” தள்ளிப்போகி இருக்கும் என்ற பேச்சுக்களும் அடிபட்டது.
இந்த நிலையில் தற்போது “கோப்ரா” வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது “கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ஒரு வழியாக திரைப்படம் வெளிவருகிறது என ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.
YES, IT IS AUGUST 31! 🎉👏
Let the countdown begin for one of biggest releases of the year, #ChiyaanVikram’s #Cobra. @arrahman @AjayGnanamuthu @Udhaystalin @7screenstudio @IrfanPathan @SrinidhiShetty7 @roshanmathew22 @dop_harish @mirnaliniravi @SonyMusicSouth @kalaignartv_off pic.twitter.com/fBGzc4Nz56
— Red Giant Movies (@RedGiantMovies_) August 9, 2022