Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கோப்ரா” ரிலீஸ் ஆவதில் சிக்கலா?? என்ன விஷயம்?

CINEMA

“கோப்ரா” ரிலீஸ் ஆவதில் சிக்கலா?? என்ன விஷயம்?

விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம் தெரியுமா?

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படம் “அப்போ” ரிலீஸாகும் “இப்போ” ரிலீஸாகும் என இரண்டு வருடங்களாக தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது.

ரசிகர்களும் “எப்போ ரிலீஸ்?” “எப்போ ரிலீஸ்?” என கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதனை தொடர்ந்து ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடப்போவதாகவும் அறிவிப்பு வந்தது. வெகு காலமாக இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களை குஷிப்படுத்தியது.

ஆனால் தற்போது ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது “கோப்ரா” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஆமீர் கான் நடித்த “லால் சிங் சத்தா” திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்து 11 ஆம் தேதி வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் ஒரே நாளில் தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக இரண்டு படங்கள் வெளிவரவேண்டிய நிலை.

ஆனால் இரண்டுமே ஸ்டார் திரைப்படங்கள். ஆதலால் இந்த இரண்டில் எதாவது ஒரு திரைப்படம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது “கோப்ரா” திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top