CINEMA
வெளியானது “சோழா சோழா” பாடல்..? திடீரென ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “சோழா சோழா” பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து மொழிகளிலும் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல் “ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு Slow Poison” என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “சோழா சோழா” பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது “பொன்னியின் செல்வன்” படக்குழு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் விக்ரம் பேய் ஆட்டம் ஆடுவது போல் தென்படுகிறது. இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ரசிகர்கள் பலரும் கம்மென்ட் பகுதியில் “வேற லெவல்”, “Goosebumps” என கம்மென்ட் செய்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பொன்னி நதி” பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான் தற்போது இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. மேலும் இது ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
