CINEMA
பொன்னியின் செல்வனுக்காக விக்ரம் செய்த சாதனை.. மிரட்டலா இருக்கே..
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக விக்ரம் செய்த சாதனையை பாருங்க.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் “விக்ரம்” ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மிகவும் உக்கிரமான கதாப்பாத்திரமான ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தை விக்ரம் சிறப்பாக ஏற்று நடித்துள்ளதாக பாராட்டப்படுகிறார். சில நாட்களுக்கு முன் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் வெளிவந்தது.
அதில் ஆதித்த கரிகாலாக வரும் விக்ரம் மிகவும் கம்பீரமாக ஒரு வசனம் பேசுகிறார். “இந்த கள்ளும் பாட்டும் ரத்தமும்” என்று அவர் பேசும் வசனம் தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக விக்ரம் செய்த சாதனையை குறித்து பலரும் பேசி வருகின்றனர். அதாவது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
இந்த 5 மொழிகளிலும் விக்ரமே அவரின் சொந்த குரலில் டப் செய்துள்ளார். இது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த செய்தியை கேட்டவுடன் பலரும் யூட்யூப்பில் சென்று அனைத்து மொழிகளிலும் வெளியான டீசரை பலரும் பார்த்து வருகின்றனர்.
கமல்ஹாசனுக்கு பின் பல வேடங்களில் நடிக்கும் திறமை பொருந்திய நடிகர் என்றால் அது விக்ரம் தான். சிறு வேடம் என்றாலும் அந்த வேடத்திற்காக இவர் செய்யும் மெனக்கடல்கள் ரசிகர்களை “ஓ” போட வைக்கும்.
இதனிடையே சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.