CINEMA
“நான் ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் சார்”… கதறி அழும் சீயான் விக்ரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்துள்ளது.
சீயான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே எஸ் ரவிக்குமார், இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளிவர உள்ள திரைப்படம் “கோப்ரா”.
இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “டிமாண்டி காலணி”, “இமைக்கா நொடிகள்” போன்ற திரைப்படங்களை இயக்கியவர். “கோப்ரா” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரீஷ் கிரிஷ்ணன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் புரொடக்சன் சார்பாக எஸ் எஸ் லலித் குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் தள்ளிப்போனது. இதற்கு முன் பல முறை இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் ரசிகர்கள் “எப்போது இத்திரைப்படம் வெளிவரும்” என ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் தான் வருகிற 31 ஆம் தேதி “கோப்ரா” திரைப்படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் தற்போது “கோப்ரா” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்துள்ளது. டிரைலரை பார்க்கும்போது இது ஒரு வித்தியாசமான ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதில் விக்ரம் கணக்கு வாத்தியாராக வருகிறார். ஆனால் எண்களை பயன்படுத்தி ஹை டெக் ஆக குற்றங்கள் செய்யும் கதாப்பாத்திரமாக தெரிகிறது. இதில் விக்ரம் பல கெட் அப்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது “கோப்ரா” திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
