Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கலர் ஃபுல் சேலை, ஹோம்லி லுக், ஆளை கவுக்கும் சிரிப்பு”.. அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

GALLERY

“கலர் ஃபுல் சேலை, ஹோம்லி லுக், ஆளை கவுக்கும் சிரிப்பு”.. அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கலர் ஃபுல் சேலையில் ஹோம்லி லுக்குடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அனுபமா பரமேஸ்வரன் 2015-ல் மலையாளத்தில் வெளியான “பிரேமம்” திரைப்படம் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். அனுபமா என்றாலே பிரேமம் திரைப்படத்தில் பள்ளி சீருடையில் சுருள் கூந்தல் ஆட பாலத்தில் நடந்து வரும் காட்சி தான் நமக்கு நினைவில் வந்து போகும்.

“பிரேமம்” திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் “அ ஆ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் தனுஷ் நடித்து 2016-ல் வெளியான “கொடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் கன்னட சினிமா உலகில் “நடாசார்வபவுமா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் தமிழில் அதர்வாவுடன் நடித்த “தள்ளிப் போகாதே” திரைப்படத்தில் க்யூட்டாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பின்பு தெலுங்கில் “ரவுடி பாய்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து “18 பேஜஸ்” “கார்த்திகேயா 2” “பட்டர்ஃப்ளை” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பல திரைப்படங்களில் பிசியாக கலக்கும் அனுபமா, தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்கவரும் பல புகைப்படங்களை இறக்கி பலரின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.அவரின் சுருள் முடிக்கும் கண்களுக்கும் மயங்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது அழகால் பல ரசிகர்களின் மனதினுள் சென்றடைந்து விட்டார்.

அனுபமாவிற்கு மலையாளத்தில் மட்டுமல்ல் தமிழிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலர்ஃபுல் சேலை கட்டி, கையில் ஹான்ட் பாக் மாட்டிக்கொண்டு, தனது மயக்கும் சிரிப்பால் ரசிகர்களை கட்டிபோடும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top