CINEMA
சந்திரமுகி திரைப்படத்தில் லாரன்ஸா? சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு
சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
“சந்திரமுகி” திரைப்படம் ரஜினி காந்தின் மாஸ் கலந்த ஒரு ஹாரர் திரைப்படமாக மக்களை வெகுவாக கவர்ந்தது. தெற்கே இருக்கும் அறையை காண்பிக்கும் போதெல்லாம் பார்வையாளர்களுக்கு வயிற்றை கலக்கியது.
அதிலும் ஜோதிகாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். சந்திரமுகியாக அவ்வப்போது மாறும்போது பார்வையாளர்களை அவரது கண்களாலேயே பயமுறுத்திவிடுவார். அதுவும் குறிப்பாக “காசு மாலை, நெட்டிசுட்டி” என சந்திரமுகியின் நகைகளை அணிந்து பார்க்கும்போது அவர் கொடுக்கும் ரியாக்சன் நம்மை நடுங்க வைத்துவிடும்.
“சந்திரமுகி” திரைப்படம் என்றாலே நமக்கு முதலில் நினைவில் வருவது “ரா ரா” பாடல் தான். அப்பாடல் அத்திரைப்படம் வந்த போது வேற லெவல் ரீச் ஆனது. கல்லூரியிலோ பள்ளியிலோ எந்த கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, “ரா ரா” பாடல் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவுக்கு அப்பாடல் மக்களை கவர்ந்தது.
மேலும் “சந்திரமுகி” திரைப்படம் என்றால் அடுத்தாக நம் நினைவில் வருவது “லகலகலக” என்ற வார்த்தை தான். அதனை “ரா ரா” பாடலின் ரஜினி கூறும் போதும் கிளைமேக்ஸில் ஜோதிகா கூறும் போதும் மாஸாக இருக்கும்.
இந்நிலையில் “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிப்பதாக தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தையும் பி. வாசு தான் இயக்குகிறார். எம். எம். கீரவாணி என்ற மரகத மணி தான் இத்திரைப்படத்தின் இசையமைக்கிறார். இவர் “பாகுபலி” “ஆர் ஆர் ஆர்” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.