Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சந்திரமுகி படத்தில் ஹீரோயின் ஜோதிகா கிடையாதாம்? இவங்க தானாம்?

CINEMA

சந்திரமுகி படத்தில் ஹீரோயின் ஜோதிகா கிடையாதாம்? இவங்க தானாம்?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்தான சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

“சந்திரமுகி” திரைப்படம் ரஜினி காந்தின் மாஸ் கலந்த ஒரு ஹாரர் திரைப்படமாக மக்களை வெகுவாக கவர்ந்தது. தெற்கே இருக்கும் அறையை காண்பிக்கும் போதெல்லாம் பார்வையாளர்களுக்கு வயிற்றை கலக்கியது.

அதிலும் ஜோதிகாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். சந்திரமுகியாக அவ்வப்போது மாறும்போது பார்வையாளர்களை அவரது கண்களாலேயே பயமுறுத்திவிடுவார். அதுவும் குறிப்பாக “காசு மாலை, நெட்டிசுட்டி” என சந்திரமுகியின் நகைகளை அணிந்து பார்க்கும்போது அவர் கொடுக்கும் ரியாக்சன் நம்மை நடுங்க வைத்துவிடும்.

“சந்திரமுகி” திரைப்படம் என்றாலே நமக்கு முதலில் நினைவில் வருவது “ரா ரா” பாடல் தான். அப்பாடல் அத்திரைப்படம் வந்த போது வேற லெவல் ரீச் ஆனது. கல்லூரியிலோ பள்ளியிலோ எந்த கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, “ரா ரா” பாடல் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவுக்கு அப்பாடல் மக்களை கவர்ந்தது.

மேலும் “சந்திரமுகி” திரைப்படம் என்றால் அடுத்தாக நம் நினைவில் வருவது “லகலகலக” என்ற வார்த்தை தான். அதனை “ரா ரா” பாடலின் ரஜினி கூறும் போதும் கிளைமேக்ஸில் ஜோதிகா கூறும் போதும் மாஸாக இருக்கும்.

இதனிடயே “சந்திரமுகி 2” திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் ராகவா லாரண்ஸ் நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலு இணைய உள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்தான ஒரு தகவல் பரவி வருகிறது. இத்திரைப்படத்தில் சந்திரமுகியாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் உண்மை தன்மை இனி தான் தெரியவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top