CINEMA
வடிவேலு முகத்தில் ஓங்கி குத்திய ராதிகா சரத்குமார்.. வைரல் வீடியோ
வடிவேலுவின் முகத்தில் லாரண்ஸும் ராதிகா சரத்குமாரும் ஓங்கி குத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துவரும் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் “சந்திரமுகி 2” உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
“சந்திரமுகி 2” திரைப்படத்தை பி. வாசு இயக்கி வருகிறார். “பாகுபலி”, “ஆர் ஆர் ஆர்” போன்ற திரைப்படத்திற்கு இசையமைத்த எம் எம் கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தோட்டா தரணி கலை இயக்குனராக இணைந்துள்ளார். “சந்திரமுகி” முதல் பாகம் போலவே இத்திரைப்படமும் சிறப்பாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“சந்திரமுகி” திரைப்படத்தில் வடிவேலு காமெடி வேற லெவலில் இருக்கும். இப்போதும் அத்திரைப்படத்தின் காமெடி காட்சிகளை ரசித்து விரும்பி பார்ப்பவர்கள் பலர் உண்டு. தற்போது உருவாகி வரும் “சந்திரமுகி 2” திரைப்படத்திலும் வடிவேலு இடம்பெற்றுள்ளதால் காமெடி கலக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “சந்திரமுகி 2” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் போது ராதிகா சரத்குமார், ராகவேந்திரா லாரண்ஸுடன் சேர்ந்து வடிவேலுவிடம் கலாட்டா செய்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
First schedule wrap #Chandramukhi2 nothing but high energy with @offl_Lawrence #vadivelu on #Pvasu s sets @LycaProductions pic.twitter.com/NFk7DuKTyR
— Radikaa Sarathkumar (@realradikaa) August 9, 2022