CINEMA
சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு நடனம் ஆடிய மன்சூர் அலி கான்.. வைரல் வீடியோ
“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலுக்கு மன்சூர் அலி கான் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“விக்ரம்” திரைப்படத்தில் நரேனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்க வைக்க கமல் ஹாசன் அங்குள்ளவர்களிடம் சண்டையிடுவார். அப்போது பின்னணியில் “சக்கு சக்கு வத்திக்குச்சி” என்ற பாடல் ஒலிபரப்பாகும்.
அந்த பாடல் அந்த சண்டை காட்சியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. படம் வெளியான பின் அந்த பாடலை பலரும் யூட்யூப்பில் தேடிச் சென்று பார்த்த வண்ணம் இருந்தனர்.
“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடல் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த “அசுரன்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும். அத்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் மறைந்த இசையமைப்பாளர் ஆதித்யன்.
“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலை மீண்டும் இணைய வாசிகள் டிரெண்டு செய்து உள்ளனர். அப்பாடலில் மன்சூர் அலிகான், ரோஜா, நெப்போலியன் ஆகியோர் நடனம் ஆடியிருப்பர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து பேசிய போது “எனக்கு மன்சூர் அலி கான் மிகவும் பிடிக்கும்” என கூறியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” திரைப்படத்தின் கதையை மன்சூர் அலி கானை மனதில் வைத்து தான் எழுதியதாகவும் கூறியிருக்கிறார்.
video courtesy: kollywood_24x7
இந்நிலையில் அப்பாடலுக்கு மன்சூர் அலி கான் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் மன்சூர் அலி கான் “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலில் எப்படி நடனமாடினாரோ அதே போல் நடனம் ஆடியுள்ளார். அவருடன் சில இளைஞர்கள் நடனம் ஆடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
