CINEMA
நிர்வாணமாக திரிந்த நடிகர் மீது பாய்ந்த வழக்கு… வசமா சிக்கிட்டாரு
நிர்வாணமான உடம்பில் வித விதமாக போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான ரன்வீர் சிங் “பாஜிராவ் மஸ்தானி”, “பத்மாவதி” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் சமீபத்தில் வெளியான “83” திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் வந்து நம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டார். அதன் பின் கடந்த மே மாதம் வெளியான “ஜாயேஷ் பாய் ஜோர்டார்” என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன் பேப்பர் என்ற இதழுக்கு நிர்வாண ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தினார் ரன்வீர் சிங். அதில் ரன்வீர் சிங் உடம்பில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் பல வித விதமான போஸ்கள் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது. மேலும் அந்த பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் சில கெட்ட வார்த்தைகளை ரன்வீர் சிங் பயன்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த புகைப்படங்களால் ரன்வீர் சிங் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். அதாவது மும்பை செம்பூர் போலீஸ் நிலையில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனம் சார்பாக வேதிகா சௌபி என்ற வழக்கறிஞர் ஒருவர் இப்புகாரை கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில் “ரன்வீர் சிங் பொதுவெளியில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வத்தொண்டு நிறுவனம் சார்பாக அளித்த அந்த புகார்களின் அடிப்படையில் பொது கண்ணியத்தை மீறுதல், ஆபாசமாக நடந்துகொள்ளல், பெண்களை அவமானப்படுத்துவது போல் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
