Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“பல லட்ச ரூபாய் மோசடி”.. மோசம் போன போனி கபூர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

CINEMA

“பல லட்ச ரூபாய் மோசடி”.. மோசம் போன போனி கபூர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

தயாரிப்பாளர் போனி கபூரின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பல லட்ச ரூபாய் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியாவின் பிரபலமான தயாரிப்பாளர். சமீபத்தில் தமிழிலும் கூட பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவரது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து அவருக்கே தெரியாமல் லட்சக்கணக்கில் ரூபாய் பரிமாறப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது அவரது கிரெடிட் கார்டின் விவரங்களை பயன்படுத்தி ரூ. 3.82 லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள். இது குறித்து மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸாரிடம் அவர் தெரிவித்த தகவல் என்னவென்றால் “என்னிடம் யாரும் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்கவில்லை, நானும் யாருக்கும் கொடுக்கவில்லை” என கூறியுள்ளார். இவருக்கே தெரியாமல் இவரது கிரெடிட் கார்டு விவரங்கள் பயன்படுத்தப்பட்டு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 5 முறை அவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பயன்படுத்தி ரூ. 3.82 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்பணப்பரிமாற்றம் போனி கபூர் வங்கி கணக்கிற்கும் குர்கிராம் என்ற ஊரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கும் இடையே நடந்துள்ளதாகவும் கூடுதல் தகவல் ஒன்றும் வெளிவந்துள்ளது. “Information technology act”-ன் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போனி கபூர் தமிழில் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”,”நெஞ்சுக்கு நீதி”, “வீட்ல விஷேசம்” ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் அஜித் குமார் நடித்து வரும் “AK 61” திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் போனி கபூருக்கு இத்துயர சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் இந்திய திரையுலகினரையே அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top