CINEMA
“பார்த்திபன் நம்மை ஏமாற்றிவிட்டார்”.. திடீரென கிளம்பிய புளூ சட்டை மாறன்..
“பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை, இன்னொரு ஈரானியன் படம் தான்?” என புளூ சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் பல திரைப்படங்களை மூர்க்கமாக விமர்சித்து வருபவர். ஆதலால் அவரை இணையத்தில் பலரும் ட்ரோல் செய்து கொண்டே இருப்பார்கள். புளூ சட்டை மாறன் “ஆண்டி இந்தியன்” என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
இந்நிலையில் புளூ சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் பார்த்திபன் “இரவின் நிழல்” திரைப்படம் தான் முதல் நான் லீனியர் சிங்கில் ஷாட் திரைப்படம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார் என டிவீட் செய்துள்ளார்.
அவர் பகிர்ந்த டிவிட்டில் “2013 ஆம் ஆண்டு வெளியான Fish and Cat என்ற ஈரானிய திரைப்படம் தான் உலகின் முதல் நான் லினியர் கதையம்சத்தை கொண்ட சிங்கிள் ஷாட் திரைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Parthiban claims that Iravin Nizhal is WORLD’S FIRST non linear singe shot film. But that is not true. It was Iranian film Fish & Cat 2013.
World’s reputed film magazine agrees the same:
Fish & Cat experiments with nonlinear narrative – https://t.co/WoVtyvTAj3#IravinNizhal pic.twitter.com/tbiHdU2GTW
— Blue Sattai Maran (@tamiltalkies) July 16, 2022
எனினும் ரசிகர்கள் அந்த ஈரானிய திரைப்படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் இல்லை, அது வெறும் சிங்கிள் ஷாட் தான் என கூறிவருகின்றனர்.
பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் என்ற விளம்பரத்துடன் வெளியானது. இத்திரைப்படத்தில் பார்த்திபனுடன் பிரிகிடா சாகா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
“இரவின் நிழல்” திரைப்படத்தை பலரும் புகழ்ந்து வருகின்றனர். பார்த்திபன் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புளூ சட்டை மாறன் பார்த்திபன் பொய் சொல்கிறார் என டிவிட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.