Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

புளூ சட்டை மாறனின் உருவ பொம்மை எரிப்பு…

CINEMA

புளூ சட்டை மாறனின் உருவ பொம்மை எரிப்பு…

புதுச்சேரியில் விமர்சகர் புளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை எரித்துள்ளனர் ரசிகர்கள்.

பிரபல திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் பல திரைப்படங்களை மூர்க்கமாக விமர்சித்து வருபவர். ஆதலால் அவரை இணையத்தில் பலரும் ட்ரோல் செய்து கொண்டே இருப்பார்கள். புளூ சட்டை மாறன் “ஆண்டி இந்தியன்” என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் புளூ சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் பார்த்திபன் “இரவின் நிழல்” திரைப்படம் தான் முதல் நான் லீனியர் சிங்கில் ஷாட் திரைப்படம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார் என சமீபத்தில் டிவிட் செய்தார்.

மேலும் 2013 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய படமான “Fish and Cat” தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கில் ஷாட் படம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது பாண்டிச்சேரியில் புரொவிடண்ட் மால் திரையரங்கின் முன் ரசிகர்கள் பலர் புளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து எரித்தனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கில் ஷாட் என்ற விளம்பரத்துடன் வெளியானது. இத்திரைப்படத்தில் பார்த்திபனுடன் பிரிகிடா சாகா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். “இரவின் நிழல்” திரைப்படத்தை பலரும் புகழ்ந்து வருகின்றனர். பார்த்திபன் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top