TELEVISION
த்ரிஷாவின் குந்தவையாகவே மாறிப்போன பிக் பாஸ் சுருதி.. வேற லெவல்
“பொன்னியின் செல்வன்” த்ரிஷா போலவே உருமாறி பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சுருதி.
“பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுருதி மாடல் உலகில் அழகு பதுமையாக திகழ்பவர். “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனியுடன் நெருங்கிய தோழியாக பழகிய இவர், ஒரு Coin டாஸ்க்கில் தாமரையிடம் இருந்து சர்ச்சைக்குரிய விதத்தில் காயினை திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சில வாரங்களிலேயே அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து “பிக் பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சுருதி நுழைந்தார். மேலும் இதனை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் த்ரிஷா குந்தவை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கெட் அப் பலராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் “குந்தவை” தோற்றத்தை அப்படியே உரித்துவைத்தார் போல் மாறி இருக்கிறார் சுருதி.
சுருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் த்ரிஷாவின் குந்தவை கெட் அப்பில் இருக்கும் அப்புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் “பொன்னியின் செல்வன்” நாவலில் குந்தவையின் அழகு குறித்து அதன் ஆசிரியர் கல்கி எழுதிய வர்ணனைகளை அப்படியே பதிவிட்டிருக்கிறார்.
View this post on Instagram
செந்தாமரை நிறத்தில் இருப்பார் குந்தவை. அவரது திருமுகம் சிற்பிகள் வடித்த சிலை போல் சிறிது நீள வட்டமாயிருக்கும். குந்தவையின் கண்கள் கருநீல வர்ணத்தில் இருக்கும், மேலும் நீலோத் பழத்தின் இதழை போல நீண்டு பொலிந்திருக்கும். குந்தவையின் மூக்கு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருக்கும் எனவும் அவரது இதழ்கள் தேன் பிலிற்றும் மாதுளை மொட்டு போல் இருக்கும் எனவும் கல்கி குந்தவையின் அழகை வர்ணித்திருப்பார். இந்த வர்ணனைகளை சுருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சுருதி வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
