TELEVISION
நீங்க பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய வேண்டுமா?.. இந்த வீடியோவை பாருங்க..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளிவந்துள்ளது.
சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். ஒரு வீட்டிற்குள் பல நபர்களை ஒன்றாக தங்கவைத்து அவர்களுக்கிடையே போட்டிகளை வைத்து விறுவிறுப்பை கூட்டும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் வந்தபோதே டிஆர்பியில் மாஸ் காட்டியது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரசிகர்கள் பெரும்பாலும் பிக் பாஸையே விரும்பி பார்ப்பார்கள். இந்த டிஆர்பியை உடைப்பதற்கு பல சேன்னல்கள் முயன்று பார்த்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியே முன்னணியில் இருக்கிறது.
“பிக் பாஸ்” சீசன் 1க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் வர ஆரம்பித்தன. இதுவரை 5 சீசன்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தான் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது.
“பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் Call Promo தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இந்த முறை விஜய் தொலைக்காட்சி வித்தியாசமான ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமல்லாது பொது ஜனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி நுழையலாம் என்பது குறித்தான வீடியோ தான் தற்போது வெளிவந்துள்ளது.
“பிக் பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகொண்டிருந்தார். ஆனால் இடையில் அவர் சில காரணங்களுக்காக வெளியேறினார். அதனை தொடர்ந்து சிம்பு தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவாரா? அல்லது கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.