TELEVISION
பிக் பாஸ் அமீர் சும்மா சுத்தி சுத்தி ஆடுறாரே…
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிக்ழச்சியில் பிக் பாஸ் அமீர்-பாவனி ஜோடி கலக்கலாக ஆடிய நடனம் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 –ல் பங்கேற்பாளராக கலந்து கொண்டவர் நடிகை பாவனி. இவர் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன தம்பி தொடரிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாவனி, வைல்ட் கார்டில் வீட்டிற்குள் வந்த அமீருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் வீட்டிற்குள் காதல் புறாக்களை போல் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அமீர் தனக்கு நல்ல நண்பன் எனவும் அமீரை தான் காதலிக்கவில்லை எனவும் நிகழ்ச்சியினிடயே பல முறை பாவனி கூறிவந்தார். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த விஷயம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதல் பறவைகள் போல் திரிந்த அமீர்-பாவனி ஜோடி தற்போது “பிக் பாஸ் ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கெடுக்கின்றனர். அமீர் ஏற்கனவே நடன இயக்குனர் தான் என்பது நமக்கு தெரிந்த விஷயமே.
இந்நிலையில் சென்ற வார நிகழ்ச்சியில் “சப்போஸ் உன்ன காதலிச்சு” பாடலுக்கு நடனமாடிய அமீர்-பாவனி ஜோடி பார்வையாளர்களை “ஓ” போட வைத்து விட்டார்கள். அமீர் காற்றில் பறந்து சுத்தி சுத்தி நடனமாடிகிறார். பாவனியை நாம் பிக் பாஸ் வீட்டிற்குள் நடனமாடி பார்த்ததில்லை. ஆனால் இதில் அவரின் இன்னொறு பக்கம் தெரிகிறது. நடனத்தில் அமீருக்கு சமமாக பிச்சு உதறுகிறார்.
நீல நிற ஆடையில் இருவரும் ஜொலிக்கிறார்கள். அசத்தலாக நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் நடுவர் ரம்யா கிருஷ்ணனிடம் பாரட்டையும் பெற்றனர்.