TELEVISION
“பாரதி கண்ணம்மா” வில்லியின் குழந்தைய பாருங்க!: செம க்யூட்..
“பாரதி கண்ணம்மா” தொடரில் வில்லியாக நடித்துவரும் ஃபரீனா அன்னையர் தினமான இன்று தனது மகனுடன் ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” தொடரில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா. “பாரதி கண்ணம்மா” தொடரில் வில்லத்தனமான லுக்குடன் கண்ணம்மாவை எப்படி பழி வாங்குவது என திட்டம் தீட்டி கொண்டிருப்பார்.
அப்படி நாம் பார்த்த ஃபரீனா நிஜ வாழ்வில் ஒரு கண்ணியமான தாய். சமீபத்தில் தான் அவருக்கு மகன் பிறந்தார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வித விதமான கண்கவர் ஆடைகளுடன் எப்போதும் புகைப்படங்களை பகிரும் ஃபரீனா அன்னையர் தினமான இன்று தன்னுடைய மகனுடன் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் அப்புகைப்படங்களில் “புதிதாக அன்னையர் ஆகிருக்கும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். தாயாக இருப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது எனக்கு தெரியும். அன்னையர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்வோம். நமது புதிய அன்புக்கும், நமது உற்சாகத்துக்கும் சியர்ஸ். ஜியானுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
அன்னையர் தினமான இன்று நடிகை காஜல் அகர்வாலும் தனது மகனின் முதல் புகைப்படத்தை வெளியிட்டார். அதிலும் தனது மகனின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தியிருந்தார். அதே போல் “பாரதி கண்ணம்மா” தொடரில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனாவும் தனது மகனுடன் புகைப்படத்தை பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனுடன் ஃபரீனா எடுத்த ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. குழந்தை பெற்ற பின்னும் ஃபரீனா அதே அழகோடு திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram