TELEVISION
“பாக்யா நம்ம கல்யாணத்துக்கு வரணும்”… மகிழ்ச்சியில் ராதிகா..ஷாக்கான கோபி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்யலக்ஷ்மி தொடர் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறது. கோபி கதாப்பாத்திரம் பாக்யலக்ஷ்மிக்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்யப்போகும் விஷயம் திரைக்கதையாக்கப்பட்ட விதம் சுவாரசியமாக செல்கிறது.
இதில் பாக்யலக்ஷ்மி கதாபாத்திரம் தனது கணவர் கோபியின் மீது கண்முடித்தனமான அன்பை வைத்திருக்கும் கதாப்பாத்திரம். ஆனால் கோபியோ ராதிகா என்ற பெண்ணை காதலித்து பழகி வருகிறார். இந்த விஷயத்தை கோபி பாக்யலஷ்மிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். அதே போல் பாக்யலக்ஷ்மிக்கு தெரியாமலயே பாக்யலக்ஷ்மியை விவாகரத்து செய்யும் முயற்சியிலும் இருக்கிறார்.
எனினும் ஒரு தருணத்தில் பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பாக்கியாவிடம் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அது கோபிதான் என்று பாக்யாவிற்கு தெரியாது. அதே போல் பாக்யாவின் கணவர் தான் கோபி என்று ராதிகாவிற்கு தெரியாது.
பாக்கியலக்ஷ்மி சொந்தமாக உணவு விநியாகம் செய்து வருகிறார். ஒரு சமயம் அவர் உணவில் தரமில்லை என கூறப்படுகிறது. அவர் மேல் வழக்கு தொடுக்கப்படுகிறது. எனினும் பாக்கியா குற்றமற்றவர் என நிருபணம் ஆகிறது. ஆனால் கோபி இனிமேல் உணவு விநியோக பிசினஸில் ஈடுபட வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லிவிடுவார்.
இது ராதிகாவிற்கு தெரியவர, ராதிகா கோபியிடம் பாக்யாவின் கணவரிடம் சென்று அறிவுரை கூறுமாறு கேப்பார். உடனே பாக்யாவிடம் சென்று கோபி உணவு விநியோகத்தை மறுபடியும் தொடங்க அனுமதி கொடுத்துவிடுவார்.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் கதைக்களத்தில் கோபி ஷாக் ஆகும் வகையில் ராதிகா பாக்கியலக்ஷ்மியை தனது திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என கூறுகிறார். அதற்கு கோபி, பாக்யா நமது மனைவி என்று தெரியவந்தால் என்ன செய்வது என மனதுக்குள் பயப்படுகிறார். கோபி என்ன செய்வார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.