CINEMA
பாலய்யா 107 ஆவது திரைப்படத்தின் தெறி போஸ்டர்..
பாலகிருஷ்ணாவின் 107 ஆவது திரைப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலய்யா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு இருக்கும் Fan base-ஐ சொல்லவே அவசியமில்லை. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு.
இவர் நடித்து சமீபத்தில் வெளியான “அகண்டா” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. மேலும் அத்திரைப்படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகி பரவலாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக அத்திரைப்படத்தில் வரும் டூயட் பாடல் ஒன்றில் பாலகிருஷ்ணா ஆடிய வித்தியாசமான நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அவரின் திரைப்படங்கள் அனைத்தும் அல்டிமேட் கமர்சியல் மசாலா திரைப்படங்கள் தான். அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது போல் தான் அவரின் திரைப்படங்கள் அமைந்திருக்கும். அவரின் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் அனல் பறக்கும். அதை விட திரைப்படங்களில் அவர் பேசும் வசனத்திற்காகவே பல ரசிகர்கள் உண்டு.
பாலகிருஷ்ணா பிரபல நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என். டி. ராமாராவின் மகன். அதுமட்டுமல்லாது ஆந்திராவின் ஹிந்துபூர் தொகுதியில் எம். எல். ஏ. ஆகவும் திகழ்கிறார்.
இந்நிலையில் தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் அவரின் 107 ஆவது திரைப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கையில் ரத்தம் தெறிக்கும் நீண்ட வாளுடன் மாஸாக காட்சித் தருகிறார். மேலும் அப்போஸ்டரில் “Hunt Begins” என குறிப்பிட்டுள்ளது.
பாலகிருஷ்ணாவின் 107 ஆவது திரைப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை எஸ். தமன் இசையமைத்து வருவகிறார். இன்று என். டி. ராமாராவின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணாவின் 107 ஆவது திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
విశ్వవిఖ్యాత నట సార్వభౌముడు, తెలుగు జాతి ఆత్మగౌరవ ప్రతీక శ్రీ నందమూరి తారక రామారావు గారి శతజయంతి సందర్భంగా ఆ మహనీయుని స్మరించుకుంటూ..#NBK107 MASS poster is here!
NATASIMHAM #NandamuriBalakrishna @shrutihaasan @megopichand @OfficialViji @MusicThaman pic.twitter.com/MMSS2Hiy2I
— Mythri Movie Makers (@MythriOfficial) May 28, 2022
