TELEVISION
“வித்யுலேகா Iron box-க்கு முத்தம் கொடுப்பாங்க”..பங்கமாய் கலாய்த்த பாலா…
குக் வித் கோமாளியில் இந்த வார பிரொமோ வெளியாகியுள்ளது. அதில் பாலா வித்யூலேகாவை என்னமாய் கலாய்க்கிறார் பாருங்கள்.
தமிழ்நாட்டின் “ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என்று அழைக்கப்படும் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இந்த வார புரொமோக்கள் வெளியானது. வழக்கம்போல் கலகலப்புக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இல்லாத வகையில் இந்த வாரமும் எபிசோடுகள் அமையவிருக்கின்றன.
சென்ற வாரம் நடந்த Celebration round-ல் வைல்ட் கார்டாக உள்ளே வந்த முத்துக்குமாரும் சுட்டி அரவிந்தும் முதல் எபிசோடிலேயே நன்றாக சமைத்து செஃப்களிடம் பாரட்டை பெற்றனர்.
சுட்டி அரவிந்திற்கு அதிர்ச்சி அருண் கோமாளியாக வந்தது தான் கலகலப்பான விஷயம். Gap கிடைக்கும் போதெல்லாம் அதிர்ச்சி அருண் சுட்டி அரவிந்தை பங்கமாய் அவ்வப்போது கலாய்த்தது தான் முந்திய வார எபிசோட்டின் ஹைலைட்.
முத்துக்குமாருக்கு பரத் கோமாளியாக வந்தது பரத்தின் பொல்லாத நேரமாக அமைந்தது. பாவம்! பரத்தை போட்டு படுத்தி எடுத்திட்டார் மனுஷன். அதிலும் எக்ஸ்ட்ரா மாதுளைப்பழத்திற்கு பரத்தை அதிக முறை சுத்தவிட்டது படு ரகளையாக இருந்தது.
போட்டியின் இறுதி வரை சென்று கிரேஸ் மற்றும் அவரது கோமாளி சுனிதா ரெஃப்ரிஜ்ரேடரை பரிசாக வென்றனர். அட்வாண்டேஜ் டாஸ்கில் வெற்றி பெற்ற வித்யுலேகாவும் கோமாளி மணிமேகலையும் சோகத்தில் முழ்கினர். குறிப்பாக மணிமேகலை தலையில் துண்டை போட்டு கொள்வது போல் தனது சட்டையை போட்டுக்கொண்டது மற்றவர்களுக்கு படு ரகளையாக இருந்தது.
வழக்கம் போல் இந்த வாரத்திற்கான புரோமோக்கள் வெளிவந்திருக்கிறது. அதில் பாலா வித்யூலேகாவை காட்டி, “ஐயர்ன் பாக்ஸை வேற விஷயத்துக்காக யூஸ் பண்றது நம்ம அக்கா தான், லிப்ஸ்டிக் போடமாட்டாங்க, ஐயர்ன் பாக்ஸ்க்கு முத்தம் கொடுப்பாங்க டெய்லி” என பங்கமாய் கலாய்க்கிறார். இந்த வாரமும் செமத்தியான என்டெர்டெயின்மென்ட் காத்துக்கொண்டிருக்கிறது.