TELEVISION
தனது மனைவியையே யார் என்று கேட்ட கோபி; அதிர்த்து போன பாக்கியா..
தனது மனைவியான பாக்கியலட்சுமியை கோபி யார் என கேட்டது பாக்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாக்யலட்சுமி தொடரில் கோபி பாக்யாவை கழட்டிவிட்டு எப்படியாவது தனது கல்லூரி தோழியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என துடியாய் துடிக்கிறார். ஆனால் சமீபத்தில் ராதிகாவிடம் போதையில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியின் புகைப்படத்தை காட்டினார். இதனால் ராதிகாவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதே போல் பாக்யலட்சுமியிடமும் போதையில் கோபி தான் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் உளறிவிட்டார். இதனால் பாக்கியலட்சுமியும் ஷாக் ஆனார். ஆனால் கோபி தன்னுடைய தோழியான ராதிகாவைத் தான் காதலிக்கிறார் என பாக்கியாவிற்கு தெரியாது.
அதன் பின் ராதிகா கோபியை வெறுத்துக் கொண்டே வருகிறார். ஒரு நாள் ராதிகாவின் வீட்டிற்கு கோபி சென்ற போது ராதிகா அவரை வெளியே போகும்படி கத்தினார். அதன் பின் ராதிகாவின் முன்னாள் கணவர் கோபியை வம்புக்கு இழுக்க அதன் பின் இருவரும் சண்டை இட்டார்கள்.
கோபி இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்ததில் இருந்து பாக்கியாவுக்கு நிம்மதியே இல்லாமல் போனது. ஆதலால் அந்த பெண் யார் என கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் பாக்யா இருக்கிறார்.
இந்நிலையில் “R” என கோபி தனது மொபைலில் பதிந்திருக்கும் நம்பரை பாக்யா பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது உள்ளே நுழைந்த கோபி “என்னுடைய மொபைலை என்னிடம் கொடு” என சத்தம் போட்டார்.
அதற்கு பாக்கியா “நீங்கள் R என்று பதிந்திருக்கும் நம்பரில் இருந்து கால் வந்தால் பதட்டம் அடைகிறீர்கள். அது யார்? அது ஆணா? பெண்ணா?” என கேட்டார். அதற்கு கோபி டென்ஷன் ஆகி “இது போன்று துருவி துருவி கேள்வி கேட்காதே என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். இப்படி கேள்வி கேட்பதற்கு நீ யார்?” என கேட்டுவிட்டார். இதனால் பாக்கியா பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்.