TELEVISION
கோபியின் பித்தலாட்டத்தை போட்டு உடைத்த பாக்கியா.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கோபி செய்த பல பித்தலாட்டங்களை பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரின் முன்பும் வெளிப்படுத்திவிட்டார்.
கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அட்மிட் ஆன போது ராதிகா அவரை பார்க்க வந்திருந்தார். இதனை பாக்கியலட்சுமி பார்த்து விட்டார். அதனை தொடர்ந்து ராதிகாவும் கோபியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட போது பாக்கியாவிற்கு கோபி இது வரை செய்த பித்தலாட்டங்கள் தெரிய வந்தது.
அதன் பின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த கோபியை பாக்கியலட்சுமி மடக்கினார். கோபிக்கும் ராதிகாவிற்கும் உள்ள தொடர்பை குடும்பத்தினர் முன் போட்டு உடைத்தார்.
தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்ற பெரும் கோபத்தில் இருந்த பாக்கியா அனலாய் கொதித்து எழுந்தார். இந்நிலையில் கோபி இதற்கு முன் செய்த பித்தலாட்டங்களை எல்லாம் புட்டு புட்டு வைத்து விட்டார் பாக்கியா.
பாக்கியாவின் மாமனாருக்கு பிறந்த நாள் வந்த போது ராதிகா வீட்டிற்கு வந்தார். அப்போது கோபி தனக்கு நெஞ்சு வலி என நாடகம் ஆடி பிறந்த நாள் விழாவையே நிறுத்த பிளான் போட்டார். ஆனால் அது சாத்தியப்படவில்லை என்று தெரிந்தவுடன் கோபி அவரின் அறைக்குள்ளேயே பதுங்கி விட்டார்.
மேலும் ராதிகாவிற்கு கோபி தான் பாக்கியாவின் கணவர் என்று தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டிலுள்ள புகைப்படங்களை எல்லாம் மறைத்து வைத்தார் கோபி. இது எல்லாவற்றையும் சுட்டிக் காட்டி கோபியை விளாசி எடுத்துவிட்டார் பாக்கியா.
மேலும் கோபி பேசிய அனைத்தையும் தான் நம்பியதாகவும், ஆனால் ஏமாற்றி விட்டார் எனவும் அழுதார். அனைவரும் எதிர்பார்த்த தருணம் தற்போது வந்துவிட்டது. இதன் பின் கோபி ராதிகா தான் வேண்டும் என கூறுவாரா? அல்லது பாக்கியாவை சமாதனப்படுத்துவாரா? அப்படியே பாக்கியாவை சமாதானப்படுத்தினாலும் கோபியை பாக்கியா ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.