TELEVISION
“எனக்கு டைவர்ஸ் ஆனது நல்ல விஷயம் தான்”… கோபி வெளியிட்ட பகீர் விடியோ..
தனக்கு டைவர்ஸ் ஆனது நல்ல விஷயம் தான் என கோபி ஒரு பகீர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகாவை காதலித்து வருகிறார் என தெரிந்தவுடன் பாக்யா எரிமலையாய் வெடித்து வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் கோபி குடும்பத்தினர் அவரை பல முறை அழைத்து பார்த்தும் வீட்டிற்கு திரும்பவில்லை.
ஒரு நாள் திடீரென வீட்டிற்கு திரும்பிய பாக்யா, கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என கோபியை அழைத்தார். அதை கேட்டதும் குடும்பத்தினர் ஷாக் ஆயினர். கோபியிடம் “இன்று கோர்ட்டுக்கு வரவேண்டும் என கடிதம் வந்துள்ளது. நாம் கோர்ட்டுக்கு போவோம்” என கூறினார்.
அதற்கு கோபி “என்னை பழிவாங்குகிறாயா?” என கோபத்துடன் கூறினார். அதன் பின் இருவரும் கோர்ட்டுக்குச் சென்றனர். அங்கே நீதிபதி அவர்களிடம் “கவுன்சிலிங் செல்கிறீர்களா?” என கேட்டார். அதற்கு பாக்கியா “இல்லை மேடம், அவர் கேட்டபடி நான் டைவர்ஸ் கொடுக்கிறேன்” என கூறினார்.
அதற்கு நீதிபதி “ஆண்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். நீங்கள் நன்றாக யோசித்து தான் முடிவெடுத்துள்ளீர்களா?” என பாக்கியாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பாக்கியா “என்ன தான் கணவன் மனைவி உறவாக இருந்தாலும் ஒருவரை அண்டி பிழைப்பது மிகப்பெரிய அவமானம். தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் உள்ள யாராக இருந்தாலும் இங்கே பிழைப்பதற்கு ஆயிரம் வழி இருக்கிறது” என கூறினார்.
பாக்கியலட்சுமியின் வாதங்களை கேட்ட நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் “பாக்கியலட்சுமி” தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “பாக்கியாவிற்கும் எனக்கு டைவர்ஸ் ஆகிடுச்சி. நல்ல விஷயம் தானே. பாக்கியா சொன்னது போல் இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் போனால் கூட டைவர்ஸ் நல்லது தான். ஆனால் கோபி கெட்டவன் இல்லை. அவன் பொய் சொன்னான். உண்மையை சொல்லியிருக்கலாம்” என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Baakiyalakshmi #Gopi 07.08.2022 pic.twitter.com/OQZu883Esf
— Parthiban A (@ParthibanAPN) August 7, 2022