TELEVISION
மருத்துவமனையில் ராதிகாவை பார்த்து ஷாக் ஆன பாக்கியலட்சுமி… என்ன ஆகப் போகுதோ?
கோபியை மருத்துவமனையில் பார்க்க வந்த ராதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமியின் கணவர் கோபிக்கு கார் விபத்து நடந்ததை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். அப்போது ராதிகா மற்றும் பாக்கியா ஆகிய இருவருக்குமே தகவல் சென்றது.
இதனை தொடர்ந்து இருவரும் கோபியை மருத்துவமனையில் காண ஒரே நேரத்தில் வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில் ராதிகாவை பாக்கியலட்சுமி மருத்துவமனையில் பார்த்து விடுவது போல் காட்டுகிறார்கள்.
ராதிகாவை பாக்கியலட்சுமி பார்த்தவுடன் ஷாக் ஆகிறார். அதன் பின் ராதிகா கோபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்கிறார். இதனை பார்த்த பாக்கியலட்சுமி மெதுவாக உள்ளே நுழைந்து கோபியும் ராதிகாவும் பேசுவதை கேட்கிறார்.
அப்போது ராதிகாவின் கையை பிடித்துக் கொண்டு கோபி “நீ இல்லைன்னா நான் செத்துடுவேன்” என கூறுகிறார். இதனை கேட்ட பாக்கியாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது.
ராதிகாவிற்கு கோபியின் மனைவி தான் பாக்கியலட்சுமி என தெரியும். ஆனால் பாக்கியாவிற்கு தன்னுடைய கணவர் மற்றொரு பெண்ணை காதலிக்கிறார் என தெரியுமே தவிர அது ராதிகா என தெரியாது.
பாக்கியாவும் ராதிகாவும் நண்பர்கள் என்பதால் தனது தோழியின் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ராதிகா கோபியை வெறுத்து வந்தார். மேலும் ராதிகா மும்பைக்கு சென்று செட்டிலாகவும் தயார் செய்து கொண்டிருந்தார்.
அந்த வேளையில் ராதிகாவின் முன்னாள் கணவர் கோபியின் வீட்டாரிடம் கோபி இன்னொரு பெண்ணை காதலித்து வருவதாக கூறினார். இதனை தொடர்ந்து வீட்டில் ஏற்பட்ட குழப்பத்தில் கோபியை அவரது தாயார் உடனே வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதில் திடுக்கிட்டு போன கோபிக்கு, காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்த செய்தியை கேட்டு பாக்கியாவும் ராதிகாவும் ஒரே சமயத்தில் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நேரத்தில் தான் பாக்கியா, ராதிகா தான் தனது கணவர் காதலிக்கும் பெண் என கண்டு கொள்கிறார். இதனை தொடர்ந்து என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.