GOSSIPS
“அவார்டு” நடிகைக்கு அம்மா போட்ட கன்டிஷன்.. இனி அவர் என்ன பண்ண போறாரோ?..
“அவார்டு” நடிகையின் திரைப்படங்கள் சமீபத்தில் எதுவும் எடுபடவில்லை என்பதால் அவரது அம்மா நடிகைக்கு கன்டிஷன் போட்டுள்ளார்.
ஆரம்பத்தில் க்யூட் கேர்ளாக வலம் வந்த அந்த நடிகை ஒரு பிரபல நடிகையின் “biopic” –ல் நடித்ததற்கு “அவார்டு” வாங்கி மாஸ் காட்டினார். அதன் பின் அவருக்கு ஏறுமுகம் தான் என நினைத்தனர்.
ஆனால் அதன் பின் “அவார்டு” நடிகை நடித்த எந்த படமும் எடுபடவில்லை. அவார்டு வாங்கிய பிறகு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் பேர் வழி என்று ரசிகர்களை கடுப்பேத்தியது தான் மிச்சம்.
அதுவும் அல்லாமல் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ரத்தம் தெறிக்க தெறிக்க நடித்த “அவார்டு” நடிகைக்கு அத்திரைப்படமும் ஒன்னும் இல்லாமல் போயிற்று. ஒருவேளை பக்கத்து மாநிலத்தில் மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் தமிழில் வித்தியாசமாக நடிக்கிறேன் என்று அருவை போடலாம் என முடிவெடுத்து விட்டாரோ என்று ரசிகர்கள் கேலி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் “அவார்டு” நடிகையின் அம்மா அவருக்கு முக்கியமான ஒரு கன்டிஷனை போட்டுள்ளாராம். அதாவது இனிமே “no acting, only marriage” என கூறியுள்ளாராம். சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸான திரைப்படத்தில் “அப்படி”ஒரு காட்சியில் நடித்தது தான் அவரின் அம்மாவுக்கு செம காண்டு ஆனதாம்.
அவரின் அம்மாவும் ஒரு பழம்பெரும் நடிகை என்பதனால் “இப்படி எல்லாம் நடித்தால் இனிமேல் பெரிய ஹீரோக்கள் யாரும் உன்னை புக் செய்ய முன் வரமாட்டார்கள், ஆதலால் ஒழுங்கா கல்யாணத்த பண்ணி செட்டில் ஆயிடு” என வறுத்து எடுத்திருக்கிறாராம். பாவம் “அவார்டு” நடிகை. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போய் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
