GOSSIPS
பெற்றோர் பார்த்த பையனுக்கு ஓகே சொன்ன “அவார்டு” நடிகை.. விரைவில் திருமணம்?
பெற்றோர் பார்த்து வைத்த பையனுக்கு ஓகே சொல்லியுள்ளாராம் அந்த “அவார்டு” நடிகை. விரைவில் திருமணமாம்.
ஒரு பிரபல நடிகையை போல் நடித்து கலக்கி அவார்டு வாங்கிய அந்த “அவார்டு” நடிகை சில மாதங்களுக்கு முன்பு அந்த பிரபல இசையமைப்பாளரை காதலிக்கிறார் என ஒரு வதந்தி பரவியது. அதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் இப்படி வதந்தி பரவி வருவது தனது மகளின் கேரியருக்கு நல்லதில்லை என வருத்தப்பட்டார்களாம்.
மேலும் இணையத்தில் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு டேட்டிங் போகிறார்கள் எனவும் செய்திகள் பரவின. ஏற்கனவே நொந்து போன நடிகையின் பெற்றோருக்கு இந்த செய்தி திடுக்கிடும் செய்தியாகவே இருந்ததாம்.
காலப்போக்கில் இந்த பேச்சுக்கள் எல்லாம் மறைய நிம்மதியானார்களாம் பெற்றோர். ஆனால் அதன் பிறகு நடிகை அந்த “ஹாலிவுட்” நடிகருடன் நெருங்கி பழகுவதாக ஒரு வதந்தி பரவ, விரைவில் தனது மகளுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என முடிவு எடுத்தனராம் பெற்றோர். அந்த நடிகையின் தாயாரும் ஒரு நடிகை என்பதால் இந்த வதந்திகள் தனது மகளின் வாழ்க்கையை பாதிக்குமே எனவும் யோசித்து வந்தாராம்.
இந்நிலையில் தற்போது தனது மகளுக்கு ஒரு பையனை பேசி முடித்துள்ளார்களாம். பையன் பெரிய பிசினஸ் மேக்னட் என கூறிக்கொள்கிறார்கள். இந்த பையன் ஓகே வா என கேட்க கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் நடிகை. இதனால் விரைவில் நடிகை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறாராம். அடுத்த வருட தொடக்கத்தில் திருமணம் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
சினிமாவில் நடிகையாக இருந்தாலே பல வதந்திகள் பரவுவது சாதாரணம் தான். எனினும் இந்த திருமணத்தால் அந்த வதந்திகளும் நிற்கும் என்பதால் அவர் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த நடிகையை பற்றி கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
