GOSSIPS
“வில் அம்பு” நடிகரை பேய் போல் துரத்தும் “விருது” நடிகை?? என்னவா இருக்கும்?
“வில் அம்பு” நடிகரை அந்த “விருது” நடிகை பேய் போல் துறத்திக் கொண்டிருக்கிறாராம். ஏன் தெரியுமா?
தமிழ், ஹிந்தி என பல காலமாக கலக்கிக் கொண்டிருக்கும் அந்த “வில் அம்பு” நடிகருக்கு சமீபத்தில் தான் விவாகரத்து ஆனது. எனினும் அதை பற்றிய கவலைகளை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது பல படங்களில் பிசியாகி வருகிறார்.
இந்நிலையில் தேசிய அளவில் விருது வாங்கிய அந்த “விருது” நடிகை தற்போது “வில் அம்பு” நடிகரை துரத்திக் கொண்டு இருக்கிறாராம். அதாவது எப்படியாவது இவருடன் மீண்டும் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாராம்.
“விருது” நடிகைக்கு சமீப காலமாக எந்த திரைப்படமும் கைக் கொடுக்கவில்லையாம். ஆதலால் “வில் அம்பு” நடிகருடன் ஒரு படத்தில் நடித்து ஹிட் கதாநாயகிகளின் வரிசையில் மீண்டும் நுழைய எண்ணுகிறாராம்.
ஆதலால் தான் இப்போது வெறி கொண்டு “வில் அம்பு” நடிகரை துரத்திக் கொண்டிருக்கிறாராம். இருவரும் இதற்கு முன் ஒரு ரயில் படத்தில் நடித்தனர். ஆனால் அந்த படம் படு மொக்கையாக இருந்ததால் படம் வெளிவந்து சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு ஓடியது.
ஆகினும் தற்போது “வில் அம்பு” நடிகருக்கு வேற லெவல் மார்க்கெட் இருப்பதாகவும், கதையை சிறந்த முறையில் தேர்வு செய்து நடிப்பதாகவும் எண்ணிக்கொண்டு மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என வெறி கொண்டு துரத்தி கொண்டிருக்கிறாராம் அந்த “விருது” நடிகை. இவ்வாறு அந்த நடிகையை பற்றி கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
