Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கசிந்தது அவதார் 2 டிரைலர்.. அதிர்ச்சியில் படக்குழுவினர்..

HOLLYWOOD

கசிந்தது அவதார் 2 டிரைலர்.. அதிர்ச்சியில் படக்குழுவினர்..

அவதார் 2 திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் கசிந்த செய்தி படக் குழுவினருக்கு பெரும் அதிர்க்கியை கொடுத்துள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவதார்”. இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 280 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு “அவதார் 2; தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆதலால் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இத்திரைப்படத்தின் டிரைலர் மே 6 ஆம் தேதி வெளியாகவிருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படத்தோடு வெளியாகும் என தகவல்கள் வந்தன. ஆனால் அதிர்ச்சி தரும் செய்தியாக இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று ஹாலிவுட்டில் தற்போது நடைபெறும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” பிரீமியரில் “அவதார் 2”  திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சினிமாக்கான் 2022 விழாவில் “அவதார் 2” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “அவதார் 2” திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அவதார் 2” திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

“அவதார்” “அவதார் 2” ஆகிய திரைப்படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேம்ரூன் உலகமே கொண்டாடப்பட்ட காதல் காவியமான “டைட்டானிக்” திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in HOLLYWOOD

To Top